புதிதாக தேர்வான காவலர்களுக்கு சட்ட தேர்வு


புதிதாக தேர்வான காவலர்களுக்கு சட்ட தேர்வு
x
தினத்தந்தி 13 May 2022 5:44 AM IST (Updated: 13 May 2022 5:44 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக தேர்வான காவலர்களுக்கு சட்ட தேர்வு நடந்தது.

திருச்சி:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2-ம் நிலை காவலர்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவலர் பயிற்சி மையங்களில் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் 198 காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த பயிற்சி தொடர்ந்து 7 மாதம் நடைபெறுகிறது. இதில் கவாத்து, துப்பாக்கி கையாளுதல், அணிவகுப்பு உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக காவலர்களுக்கு சட்ட தேர்வு மாவட்ட ஆயுதப்படை பயிற்சி மைதான வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story