திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கம்
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கணினி துறை சார்பில் டேக்னோவா 2கே22 என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கணினி துறை சார்பில் டேக்னோவா 2கே22 என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.
கணினிதுறை பேராசிரியை டி.ஜெமிபுளோரினபெல் வரவேற்று பேசினார். கருத்தரங்கிற்கு தலைமை வகித்து, கருத்தரங்கின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து கல்லூரி முதல்வர் ஞா.ஒய்ஸ்லின்ஜிஜி விளக்கி பேசினார். சிறப்பு விருந்தினரை கணினிதுறை இணைப் பேராசிரியை ஆர்.ஜென்ஸி, இணைப் பேராசிரியை ஆர்.ஆர்.பவான ஆகியோர் அறிமுகப்படுத்தி பேசினார். சிறப்பு விருந்தினராக தலைசிறந்த மென்பொருள் நிறுவனத்தில் ஆலோசகர் மற்றும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவி சக்தி கிருஷ்ணபாலா அரசகுரு கலந்து கொண்டார். கருத்தரங்கின் தொகுப்பு நூலின் முதல் பிரதியை கல்லூரி முதல்வர் வெளியிட,சிறப்பு விருந்தினர் பெற்று கொண்டார். மேலும் சிறப்பு விருந்தினருக்கு கணிணிதுறை பேராசிரியை சிறப்பு பரிசை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் பேசுகையில், மாணவர்கள் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிவதற்கு ஏதுவாக தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்கள், தாங்கள் கற்றுக் கொண்ட தொழில்நுட்பத்தை கொண்டு புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்’ என ஆலோசனை வழங்கினார். கருத்தரங்கில் காவித விளக்க காட்சி, டெக்னோஜாம், பிழை திருத்தம், வினாடி வினா ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன. கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. இறுதியாண்டு கணினித்துறை மாணவர் சுலைமான் நன்றி கூறினார். கருத்தரங்க நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் தலைமையில் கணினிதுறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story