கட்டுமான பணிகள் அனைத்தும் ஆகஸ்டு மாதத்துக்குள் நிறைவுபெறும்
கட்டுமான பணிகள் அனைத்தும் ஆகஸ்டு மாதத்துக்குள் நிறைவுபெறும்
திருப்பூர்
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் அனைத்தும் வருகிற ஆகஸ்டு மாதத்துக்குள் முடித்து ஒப்படைக்கப்படும் என்று ஆய்வுக்கு பிறகு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் நேற்று திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். ரூ.343 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, கலையரங்கம் உள்ளிட்டவை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. மருத்துவக்கல்லூரிக்கான பயிலரங்கம் கட்டி முடிக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கி நடந்து வருகிறது.
கட்டுமான பணிகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு அமைய உள்ள இடம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். கட்டுமான பணிகள் நடக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடத்தின் முன் நின்று சுகாதாரத்துறை செயலாளர் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், கட்டிடத்தின் முகப்பு பகுதி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டரிடம் தெரிவித்தார். ஆய்வின்போது கலெக்டர் வினீத், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன், இணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
ஆகஸ்டு மாதத்துக்குள் முடிக்கப்படும்
அரசு மருத்துவமனை, கலையரங்கம் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தையும் தாண்டி தாமதமாக நடந்து வருகிறது. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். பொறியாளர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு, வருகிற ஆகஸ்டு மாதத்துக்குள் அனைத்து கட்டுமான பணிகளும் முடித்து கட்டிடம் ஒப்படைக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story