கடைகளுக்கு மராத்தி பெயர் பலகை கட்டாயம்
கடைகளுக்கு வருகிற 31-ந் தேதிக்குள் மராத்தி பெயர் பலகை கட்டாயம் வைக்கவேண்டும் மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.
மும்பை,
மராட்டிய அரசு சமீபத்தில் அனைத்து வகையான கடை, ஓட்டல் பெயர் பலகைகளும் மராத்தியில் இருக்க வேண்டும் என சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி சிறிய பெட்டிக்கடைகள் முதல் அனைத்து வகையான கடைகளிலும் பெயர் பலகையில் மராத்தி மொழி தான் முதலில் இருக்க வேண்டும். மேலும் மற்ற மொழிகளைவிட, மராத்தி எழுத்துக்கள் பெரிய அளவில் இருக்க வேண்டும்.
இந்தநிலையில் கடந்த வாரம் மும்பை மாநகராட்சி நகரில் உள்ள கடைகளுக்கு நோட்டீஸ் ஒன்றை பிறப்பித்து உள்ளது. அதில் வருகிற 31-ந் தேதிக்குள் கடையின் பெயர் பலகை மராத்தியில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய விதி குறித்து கடைக்காரர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநகராட்சி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story