நத்தத்தில் ரசாயன முறையில் பழுக்க வைத்த 1½ டன் மாம்பழங்கள் பறிமுதல்


நத்தத்தில் ரசாயன முறையில் பழுக்க வைத்த 1½ டன் மாம்பழங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 May 2022 6:09 PM IST (Updated: 13 May 2022 6:09 PM IST)
t-max-icont-min-icon

நத்தத்தில் ரசாயன முறையில் பழுக்க வைத்த 1½ டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


நத்தம்:

மாம்பழ குடோன்களில் சோதனை

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள மாம்பழ குடோன்களில் எத்தீபான் ஸ்பிரே என்ற ரசாயன மருந்து மூலமாக மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சிவராமபாண்டியன் மேற்பார்வையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கண்ணன், செல்வம், ஜாபர்சாதிக் மற்றும் பணியாளர்கள் நத்தத்தில் உள்ள 13 மாம்பழ குடோன்களில்  திடீர் சோதனை நடத்தினர். 
அப்போது 4 குடோன்களில் எத்தீபான் ஸ்பிரே என்ற ரசாயன மருந்து மூலம் 1½ டன் மாம்பழங்கள் பழுக்கவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

பறிமுதல்

இதையடுத்து அந்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த மாம்பழங்கள் மண்ணில் பள்ளம் தோண்டி புதைத்து அழிக்கப்பட்டது. மேலும் மாம்பழ குடோன் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு ேநாட்டீஸ் கொடுக்கப்பட்டது. 
இதைத்தொடர்ந்து ரசாயன மருந்து மூலம் மாம்பழங்களை பழுக்கவைக்க கூடாது என குடோன் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். 

Next Story