திருச்சி விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டு,மே.14-
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தங்கம் கடத்தல்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் கடத்தல்காரர்களை பிடித்து, அவர்களிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ரூ.1¼ கோடி மதிப்புள்ள..
ஆனாலும் தங்கம் கடத்தல் என்பது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த விமான பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, 3 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அந்த பயணிகள் வைத்திருந்த மடிக்கணினி, உடைமைகளை சோதனை செய்ததில், அதில் மறைத்து வைத்து ரூ.1.28 கோடி மதிப்புள்ள சுமார் 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story