திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றதால் பக்தர்கள் உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருப்பைஞ்சீலி நீலினேஸ்வரர் கோவில் தேரோட்டம்
சமயபுரம், மே.14-
திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றதால் பக்தர்கள் உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நீலிவனேஸ்வரர் கோவில்
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலியில் பிரசித்தி பெற்ற நீலிவனேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.அன்று முதல் காலையில் பல்லக்கிலும், இரவு ஒவ்வொரு நாளும் முறையே சிம்ம வாகனம், கிளி வாகனம், யாளி வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம், கிளி வாகனம் ஆகியவற்றில் சுவாமி எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கடந்த 9-ந்தேதி இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 10-ந்தேதி திருக்கல்யாணமும் நடைபெற்றது. இரவு யானை வாகனம் மற்றும் கிளி வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அடுத்தடுத்த நாட்களில் கைலாச வாகனம், அன்ன வாகனம் தங்க குதிரை வாகனம், காமதேனு வாகனத்தில் சாமி எழுந்தருளினார்.
தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார்.தொடர்ந்து மதியம் 3.10 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்தாண்டு தேரோட்டம் நடைபெற்றதால், பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகள் ஒலிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோடும் வீதி வழியாக வலம் வந்து மாலை மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்புகளின் சார்பாக நீர்மோர், பானகம், அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை திருப்பைஞ்சீலி ஊராட்சி தலைவர் தியாகராஜன் தலைமையில் துணை தலைவர் பாலகிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் சிவலிங்கம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
பங்கேற்றோர்
விழாவில் மண்ணச்சநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் ஆதாளி, ஜெயக்குமார் மண்ணச்சநல்லூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டி.எம்.சோமசுந்தரம், மயில் பர்னிச்சர் உரிமையாளர் ஆர்.செந்தில்குமார், மண்ணச்சநல்லூர் ஒன்றிய தே.மு.தி.க. கவுன்சிலர் ஆறுமுகம், சூர்யா டிரேடர்ஸ் உரிமையாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்படி, ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு இரா.வாசுதேவன் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மண்ணச்சநல்லூர் வட்டார அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் மதிவாணன் தலைமையில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு இருந்தனர்.
மேலும் சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் செல்வராஜ் உத்தரவின்படி, கோவில் செயல் அலுவலர் முத்துராமன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
பஞ்சபிரகார புறப்பாடு
இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு மேல் தேர்க்கால் பார்த்தல் மற்றும் நடராஜர் புறப்பாடு நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கேடயத்தில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கும், நாளை மறுதினம் (16-ந்தேதி) இரவு பஞ்சபிரகார புறப்பாடும் நடைபெறுகிறது. 17-ந்தேதி காலை 7 மணிக்கு விடையாற்றி மற்றும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

Related Tags :
Next Story