திருக்கோவிலூர் நகராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி


திருக்கோவிலூர் நகராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
x

திருக்கோவிலூர் நகராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை ஆணையாளர் கீதா தொடங்கி வைத்தார்.

திருக்கோவிலூர், 

அடர் வனக்காடுகள் அமைப்பு திட்டத்தின் கீழ் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஜி.ஓ. நகர் சிறுவர் பூங்கா மற்றும் திறந்த வெளி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ராஜா வரவேற்று பேசினார். 
சிறப்பு அழைப்பாளராக திருக்கோவிலூர் நகராட்சி ஆணையாளர் கீதா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி அலுவலக எழுத்தர் சரவணன் உள்ளிட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு இலுப்பை, நாவல், வேங்கை, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டனர்.  ஏற்பாடுகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story