கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார்
ராமநத்தத்தில் கம்பத்தில் மோதி கார் தலைகுப்புற கவிழ்ந்தது.
ராமநத்தம்,
சென்னை சைதாப்பேட்டை காவேரி நகரை சேர்ந்தவர் சங்கரன் மகன் ராகவன் (வயது 28). அக்குபஞ்சர் டாக்டரான இவர், நேற்று இரவு தனது காரில் சென்னையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் திருமலைக்கு புறப்பட்டார். காரை அவரே ஓட்டி வந்தார். இந்த கார் கடலூர் மாவட்டம் ராமநத்தத்தில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு வந்தது. அப்போது ராகவனின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் உள்ள மின்விளக்கு கம்பத்தில் மோதி நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த அவர், காரின் இடிபாட்டில் சிக்கி தவித்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் ராமநத்தம் போலீசார் விரைந்து சென்று ராகவனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விபத்தில் சிக்கிய கார் அப்புறப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story