அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை
அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை
கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்துக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வர உள்ளனர். இதையொட்டி சிறப்பு பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், நில அளவைத்துறையினர் என 70 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story