பொள்ளாச்சி ஜோதி நகர் பறவைகள் பூங்காவில் பழ மரக் கன்றுகள் நடப்பட்டன


பொள்ளாச்சி ஜோதி நகர் பறவைகள் பூங்காவில் பழ மரக் கன்றுகள் நடப்பட்டன
x
தினத்தந்தி 13 May 2022 8:02 PM IST (Updated: 13 May 2022 8:02 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி ஜோதி நகர் பறவைகள் பூங்காவில் பழ மரக் கன்றுகள் நடப்பட்டன


பொள்ளாச்சி

பொள்ளாச்சி ஜோதி நகர் பறவைகள் பூங்காவில் பழ மரக் கன்றுகள் நடப்பட்டன.

பறவைகள் பூங்கா

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் பூங்கா விற்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. 

அந்த இடங்களை கண்ட றிந்து கம்பி வேலி போடப்பட்டது. இதையடுத்து அந்த பூங்காக்க ளில் மரக்கன்றுகள் வளர்த்து பராமரிக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் ஜோதிநகரில் பறவைகளுக்கு என்று தனியாக பூங்கா அமைக்கும் பணி நடைபெற்றது. 

அங்கு பறவைகள் ஈர்க்கும் வகையில் பழச்செடிகள் நடப்பட்டன.

இதேபோன்று பல்லடம் ரோடு எஸ்.ஆர். லே-அவுட்டில் பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி பழச்செடிகளை நட்டு தண்ணீர் ஊற்றினார். 

இதில் சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார், ஆறுமுகம், செந்தில்குமார், ஜெயபாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது

பழ மரக்கன்றுகள்

சாலை விரிவாக்கம் உள்பட பல்வேறு பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. 

இதனால் மரங்களில் வாழ்ந்த பறவைகள் கூட்டம் வசிக்க இடம் இல்லாத நிலை ஏற்படுகிறது. 

எனவே பறவைகள் இனம் அழிவதை தடுக்கும் நோக்கத்தில் பறவைகள் பூங்கா அமைக்கப்படுகிறது.

அங்கு பறவைகளுக்கு பிடித்தமான சப்போட்டா, பலா, மாமரம், கொய்யா, பெருநெல்லி, ஆரஞ்சு, நாட்டு நெல்லி, மாதுளை உள் ளிட்ட பழ மரக்கன்றுகள் மற்றும் செடிகள் நடப்பட்டு உள்ளன. 

இதனால் பறவைகள் வசிக்கவும், தேவையான பழங்கள் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.  

மேலும் பூங்காவை சுற்றி இயற்கை வேலியாக மரக்கன்று நடப்பட்டு உள்ளது. பறவைகள் பூங்காவுக்குள் பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை.

 செடிகளுக்குதண்ணீர் ஊற்றி பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

எனவே இந்த பூங்கா நிச்சயம் பறவைகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். 

ஏற்கனவே நகராட்சி பூங்கா இடங்களில் மூலிகை பூங்கா, மழை மரபூங்கா, மியாவாக்கி பூங்கா, நட்சத்திர பூங்கா ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story