திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 May 2022 8:05 PM IST (Updated: 13 May 2022 8:06 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திண்டுக்கல்:
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமை தாங்கினார். செயலாளர் பகத்சிங் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகளை உடனே பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் உள்ள ‘லிப்ட்’ அடிக்கடி பழுதாகிறது. அதனை சரிசெய்ய வேண்டும்.
3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தாழ்தள டிக்கெட் கவுண்ட்டரை உடனே பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story