தலைமறைவாக இருந்த தாயின் கள்ளக்காதலன் கைது


தலைமறைவாக இருந்த தாயின் கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 13 May 2022 8:39 PM IST (Updated: 13 May 2022 8:39 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல்தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் ெதால்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
6-ம் வகுப்பு மாணவி
குலசேகரம் அருகே உள்ள சுருளகோடு பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தனது மாமா மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார். பின்னர் இளம்பெண் கணவரை விட்டு பிரிந்து நாகர்கோவிலை சேர்ந்த ஒருவரை 2-வதாக திருமணம் செய்தார். இந்த வாழ்க்கையும் பெண்ணுக்கு கசந்தது. இதனால் அவரிடம் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தார். 
அதைதொடர்ந்து 10 மாதங்களுக்கு முன்பு தக்கலை அருகே மணலிக்கரை ஆற்றுக்கோணம் மேலத்தெருவிளையை சேர்ந்த கொத்தனாரான சுனில்ஜாய் (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் காட்டாத்துறையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். இளம்பெண்ணின் 11 வயது மகள் அவர்களுடன் தங்கி இருந்து 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இளம்பெண் துணிக்கடைக்கு வேலைக்கு சென்று வருகிறார். 
பாலியல் தொல்லை
தாயார் வேலைக்கு சென்ற போது மாணவி விடுமுறை நாளில் வீட்டில் இருந்தார். அப்போது சுனில் ஜாய் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இதை வெளியே சொன்னால் உன்னையும், உனது தாயாரையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. இதனால் மாணவி யாரிடமும் கூறாமல் இருந்து வந்தார். 
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி தனது பாட்டியிடம் நடந்த விவரத்தை கூறி கதறி அழுதார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பாட்டி இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
தாயின் கள்ளக்காதலன் கைது
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனை அறிந்த சுனில் ஜாய் தலைமறைவாகி விட்டார். மேலும் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையிலான போலீசார் சுனில்ஜாயை தீவிரமாக தேடி வந்தனர். 
இந்தநிலையில் நேற்று மணலிக்கரை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து சுனில் ஜாயை போலீசார் கைது செய்தனர். 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தாயின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story