தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் திமுக அரசு சாதனை விளக்க கூட்டங்கள்: அமைச்சர் கீதாஜீவன்


தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் திமுக அரசு சாதனை விளக்க கூட்டங்கள்: அமைச்சர் கீதாஜீவன்
x
தினத்தந்தி 13 May 2022 8:43 PM IST (Updated: 13 May 2022 8:43 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் திமுக அரசு சாதனை விளக்க கூட்டங்கள் வருகிற 17-ந் தேதி முதல் நடத்தப்படுவதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி;
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வருகிற 17-ந் தேதி முதல் நடக்கிறது.
இது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பொதுக்கூட்டம்
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ள 501 வாக்குறுதிகளில் 250-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அரசு பொறுப்பேற்று ஓராண்டுக்குள் நிறைவேற்றி உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இது மக்களுக்கான அரசு என்று ஒவ்வொரு நாளும் மக்களுக்கான அடிப்படை திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசின் ஓராண்டு சாதனையை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்த தி.மு.க தலைவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார். அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது. அனைத்து பொதுக்கூட்டங்களிலும் மகளிர் அணி மாநில செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு பேசுகிறார்.
17-ந் தேதி
வருகிற 17-ந் தேதி கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச்சாளர்கள் பவானி கண்ணன், தமிழ்கொண்டான் ஆகியோரும், வருகிற 21-ந் தேதி தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச்சாளர்கள் மன்னை இளங்கோவன், பவித்திரம் கண்ணன், சரத்பாலா, வருகிற 22-ந் தேதி விளாத்திகுளம்-மதுரை மெயின் ரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஆரணி மாலா, முகவை ராமர், சரத்பாலா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள் இணைந்து சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story