தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை- அனில்தேஷ்முக்கிற்கு சிறப்பு கோர்ட்டு அனுமதி மறுப்பு
முன்னாள் மந்திரி அனில்தேஷ்முக் தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி வழங்க சிறப்பு கோர்ட்டு மறுத்துவிட்டது.
மும்பை,
முன்னாள் மந்திரி அனில்தேஷ்முக் தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி வழங்க சிறப்பு கோர்ட்டு மறுத்துவிட்டது.
ஜெயிலில் மந்திரி
முன்னாள் மாநில உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் அளித்த ரூ.100 கோடி ஊழல் புகாரின் கீழ் அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்து இருந்தது.
அனில்தேஷ்முக் அவரது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மும்பையில் உள்ள பார்களில் இருந்து ரூ.4.70 கோடி வரை வசூலித்து சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.
அனுமதி மறுப்பு
இந்தநிலையில் அனில்தேஷ்முக் தனியார் ஆஸ்பத்திரியில் தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்ய அனுமதி கேட்டு மும்பை சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். மேலும் சிகிச்சைக்கான செலவையும் ஏற்றுக்கொள்வதாக கூறியிருந்தார். எனினும் மாநில அரசின் ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் அனைத்து வசதிகள் மற்றும் தகுதியான டாக்டர்கள் இருப்பதால் அனில்தேஷ்முக் தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி வழங்க கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து சிறப்பு கோர்ட்டு அனில்தேஷ்முக் தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி வழங்க மறுத்துவிட்டது. மேலும் ஜே.ஜே ஆஸ்பத்திரியில் அனில்தேஷ்முக் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது.
Related Tags :
Next Story