திருட்டு வழக்கில் வங்காளதேச நாட்டினர் 2 பேர் கைது
பெங்களூருவில் திருட்டு வழக்கில் வங்காளதேச நாட்டினர் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு கே.ஜி.நகர் போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக சுற்றிய 2 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வங்காளதேசத்தை சேர்ந்த ஒபிமுல்லா என்கிற பப்பி(வயது 32), முகமது நசீர் சேக்(35) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் பெங்களூரு புறநகர் மாவட்டம் அத்திபெலேயில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து நகரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் 2 பேருக்கும் வங்காளதேசத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்பு இருப்பதும், அந்த கொலை வழக்கில் 2 பேருக்கும் வங்காளதேச கோர்ட்டு தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இருந்ததும், அவர்கள் 2 பேரும் வங்காளதேசத்தில் இருந்து தப்பி பெங்களூருவுக்கு வந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்து உள்ளது. கைதான 2 பேர் மீதும் கே.ஜி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story