பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது


பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 May 2022 9:04 PM IST (Updated: 13 May 2022 9:04 PM IST)
t-max-icont-min-icon

பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது

பெருமாநல்லூர், மே.14-
பெருமாநல்லூர் அருகே பனியன் நிறுவன உரிமையாளர் வீட்டில்  30 பவுன்நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து  29 பவுன்நகையை போலீசார்  பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பனியன் நிறுவன உரிமையாளர்
பெருமாநல்லூர் அருகே கூட்டுறவு நகரை சேர்ந்தவர் மணிகண்டன் வயது 38. திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு  குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்ககும் போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் 2 அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த  30 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. 
இது குறித்து  பெருமாநல்லூர் போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை செய்தனர்.  மணிகண்டன் வெளியூர் சென்றதை அறிந்த ஆசாமி, அவருடைய வீட்டிற்கு வந்து பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதையடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட ஆசாமியை  தேடி வந்தனர். 
வாலிபர் கைது 
மேலும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மணிகண்டன் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட ஆசாமியின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த உருவத்தின் அடிப்படையில் போலீசார் விசாரித்தபோது மணிகண்டன் வீட்டில் திருடியது  திருப்பத்தூரை சேர்ந்த திருமால் 34 என்பது தெரிய வந்தது. இவர் பொங்குபாளையத்தில் தங்கியிருந்து திருட்டில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து   திருமாலை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 29 பவுன்  நகைகள், ரூ. 15ஆயிரம்  மதிப்புள்ள வெள்ளி நகைகள் மற்றும் மோட்டார்சைக்கிள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story