திருவேங்கடம் அருகே பள்ளி மேலாண்மை குழு கூட்டம்


திருவேங்கடம் அருகே பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
x
தினத்தந்தி 13 May 2022 9:20 PM IST (Updated: 13 May 2022 9:20 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது

திருவேங்கடம்:
திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் ஒன்றியம் அய்யனேரி ஊராட்சி கொம்பன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அய்யனேரி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி காளியப்பன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ஜாம்புவதி வரவேற்றார். சிறப்பு பார்வையாளராக ஆசிரியர் ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பள்ளி மேலாண்மை குழுவிற்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட அனைத்து புதிய பொறுப்பாளர்களும் சேர்ந்து ரூ.43,021-ஐ பள்ளி கல்வி புரவலர் திட்டத்திற்கு வைப்பு நிதியாக வழங்கினார்கள்.
கூட்டத்தில் வீரணாபுரம் வசந்தா, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பக்தன், துரைச்சாமிபுரம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்லின் சுதந்திரதேவி பள்ளிக்கு மரக்கன்றுகளை வழங்கினார்கள். பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
முடிவில் உதவி ஆசிரியர் ஆறுமுகச்சாமி நன்றி கூறினார்.


Next Story