பொள்ளாச்சி அருகே மண்ணூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்


பொள்ளாச்சி அருகே மண்ணூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 13 May 2022 9:35 PM IST (Updated: 13 May 2022 9:35 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே மண்ணூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்


பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ராமபட்டிணம் ஊராட்சியில் பொன்மலை யூர் கிராமம் உள்ளது. இந்த பகுதிக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்ய வில்லை. 

இது குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாலக்காடு ரோட் டில் மண்ணூரில் நேற்று மாலை திடீரென்று காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

அப்போது அதிகாரிகள் மோட்டார் பிரச்சினை காரணமாக சீரான குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. நாளைக்குள் (இன்று) மோட்டார் பழுதை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றனர். 

அதை ஏற்று பொதுமக்கள் போராட்டத் தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக பாலக்காடு ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story