பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டு வருவதாக மருத்துவ துறை அதிகாரிகள் தெரிவித்தனர்


பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டு வருவதாக மருத்துவ துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
x
தினத்தந்தி 13 May 2022 9:44 PM IST (Updated: 13 May 2022 9:44 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டு வருவதாக மருத்துவ துறை அதிகாரிகள் தெரிவித்தனர்


பொள்ளாச்சி

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டு வருவதாக மருத்துவ துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா பரிசோதனை ஆய்வகம்

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கிராமப்புற சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 

இதை தவிர நடமாடும் வாகனங்கள் மூலமும், பொது இடங்களிலும் பொதுமக்களிடம் இருந்து சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது.

பொள்ளாச்சி பகுதியில் சேகரிக்கப்படும் ரத்த, சளி மாதிரிகள், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த பரிசோதனை முடிவு வருவதற்கு 2 அல்லது 3 நாட்கள் வரை ஆகிறது. 

இந்த நிலையில் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து மருத்துவ துறை அதிகாரிகள் கூறியதாவது

ரூ.1 கோடி செலவில்

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சல், சளி பாதிப்பு உள்ள நபர்களிடம் இருந்து சளி, ரத்த மாதிரி சேகரிக்கப்படுகிறது. 

அவை, ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த முடிவு வருவதற் குள் பாதித்த நபர்கள் வெளியே சுற்றுவதால் தொற்று மேலும் பரவும் வாய்ப்பு உள்ளது. 

எனவே பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஐ.சி.எம்.ஆர். விதிமுறைகளின்படி ரூ.1 கோடி செலவில் கொரோனா பரிசோத னை ஆய்வகம் அமைக்கப்படுகிறது. 

அதற்கான கட்டிட வசதி தயாராக உள்ளது. எந்திரங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. 

பணியாளர்கள் நியமனம்

இதன் மூலம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேகரிக்கப்படும் மாதிரிகள் இந்த ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்படும். 12 மணி நேரத்தில் முடிவுகள் தெரிந்து விடும். 

இதன் மூலம் காலதாமதம், தொற்று பரவுதல் போன்றவை தவிர்க்கப்படும். இன்னும் ஒரு வாரத்திற்குள் ஆய்வகம் பயன்பாட்டிற்கு வந்து விடும். 

அங்கு மைக்ரோ பயோலஜி ஆய்வக நிபுணர் மற்றும் தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story