கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 May 2022 10:09 PM IST (Updated: 13 May 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்
கரூர் கொளந்தானூர் பகுதிக்குட்பட்ட அம்மன் நகரை சேர்ந்தவர் அன்புமணி(வயது 32). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி நிர்மலா(32) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அன்புமணி நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். பின்னர் அவர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story