போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுப்பு; இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு
போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுப்பு; இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள வாளாந்தூர் பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மனைவி மல்லிகா(வயது 48). இவரது குடும்பத்தாருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த முருகன்(52) என்பவரது குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் பிரச்சினை செய்து கொண்டு, இரு தரப்பினரும் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை செய்வதற்காக வாளாந்தூர் பகுதிக்கு குளித்தலை போலீசார் சென்றபோது, விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமல் இரு தரப்பினரும் தொடர்ந்து சச்சரவில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் எச்சரித்து கேட்காத காரணத்தால் மல்லிகா, அவரது மகன்கள் பெரியசாமி, முரளிபிரசாத், மகள் திவ்யகுமாரி மற்றொரு தரப்பைச் சேர்ந்த முருகன், அவரது மனைவி தவமணி, மகன் காமராஜ், மகள் விந்தியா ஆகிய 8 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story