நிருபர்களுக்கு பணம் வழங்கியதால் சர்ச்சை


நிருபர்களுக்கு பணம் வழங்கியதால் சர்ச்சை
x
நிருபர்களுக்கு பணம் வழங்கியதால் சர்ச்சை
தினத்தந்தி 13 May 2022 11:02 PM IST (Updated: 13 May 2022 11:02 PM IST)
t-max-icont-min-icon

நிருபர்களுக்கு பணம் வழங்கியதால் சர்ச்சை

கோவை

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி பட்டங்களை வழங்கினார். இந்த செய்தியை சேகரிக்க சென்றிருந்த பத்திரிகை மற்றும் ஊடகங்களை சேர்ந்த நிருபர்கள், புகைப்பட கலைஞர்களுக்கு சணலால் செய்யப்பட்ட ஒரு அழகிய பைல் வழங்கப்பட்டது. அதில், பாரதியார் பல்கலைக்கழகம் குறித்த தகவல், பட்டங்கள் வாங்குவோர் விவரம், நிகழ்ச்சி நிரல், விழாவில் பங்குபெற்றவர்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தன.

அந்த பைலுக்குள் பல்கலைக்கழக சின்னம் பொறிக்கப்பட்ட காக்கி நிறத்திலான, சிறிய கவர் ஒன்று இருந்தது. அந்த கவரை  பிரித்து பார்த்தபோது அதற்குள் புத்தம், புதிய 500 ரூபாய் நோட்டு இருந்தது. இதனால் நிருபர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விழா முடிந்ததும் இது குறித்து துணைவேந்தர் காளிராஜை சந்தித்து, ஏன் இதுபோன்று செய்தீர்கள் என்று கேட்டதுடன் அந்த பணத்தை திரும்ப ஒப்படைத்தனர். அந்த புத்தம், புதிய 500 ரூபாய் நோட்டு ஒரே சீரியல் எண்ணை கொண்டதாக இருந்தது. கவர்னர் தலைமையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நிருபர்களுக்கு பணம் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story