திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ கொடியேற்றம்


திண்டிவனம்  லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
x
தினத்தந்தி 13 May 2022 11:07 PM IST (Updated: 13 May 2022 11:07 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது.


திண்டிவனம், 

திண்டிவனத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 இதையொட்டி, சாமிக்கு காலையில் சிறப்பு பூஜைகள் நடந்து, லட்சுமி நாயிகா சமேத நரசிம்மர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க, பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது. பின்னர் மாலையில் சாமி அம்ச வாகனத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 

விழாவில் இன்று,  மாலையில் சிம்ம வாகனத்திலும் , நாளை காலை கருட வாகனத்திலும், மாலையில் அனுமந்த வாகனம் என்று தினசரி சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வர உள்ளார்.



விழாவில் 20-ந்தேதி மாலை திருக்கல்யாணமும், சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 21-ந்தேதி காலை 5.30 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.  இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் நகரப் பிரமுகர்கள் செய்து வருகிறார்கள்.

Next Story