ஊராட்சி செயலாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்


ஊராட்சி செயலாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 13 May 2022 11:19 PM IST (Updated: 13 May 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

ஆவணங்களை முறையாக பராமரிக்காத ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் லலிதா உத்தரவிட்டார்.

கொள்ளிடம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தை சேர்ந்த புளியந்துறை, காட்டூர், மகேந்திரப்பள்ளி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அரசு கான்கிரீட் வீடுகள், வாய்க்கால்களில் கதவணை உள்ளிட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
பின்னர் புளியந்துறை ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு கலெக்டர் லலிதா சென்று அங்கு ஊராட்சி பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை  பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்
இதில் ஊராட்சி கணக்கு பதிவேடுகள், ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து புளியந்துறை ஊராட்சி செயலாளராக பணியாற்றி வரும் சண்முகம் (வயது 47) என்பவரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். 
இந்த ஆய்வின்போது கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஒன்றிய என்ஜினீயர்கள் பலராமன், பூரணச்சந்திரன், தாரா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் லட்சுமி பாலமுருகன், சிவபாலன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
காட்டூர் ஊராட்சி
இதேபோல, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம், காட்டூர் ஊராட்சியில் கணக்கு பதிவேடுகள், ஆவணங்களை ஆய்வு செய்த கலெக்டர், அதனை முறையாக பராமரிக்காத ஊராட்சி செயலாளர் வேல்முருகனை பணியிடை நீக்கம் செய்தார்.

Next Story