சமுத்திரம் ஏரியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என மனு
திருவண்ணாமலை சமுத்திரம் ஏரியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை சமுத்திரம் ஏரியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை சமுத்திரம் ஏரியில் மீன் பிடிப்பதற்காக கடந்த 2017-18-ம் ஆண்டு ஏலத்தை பெரும்பாக்கத்தை சேர்ந்த முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வெங்கடேசன், அவரது மனைவி ஜெயலட்சுமி பெயரில் எடுத்திருந்தார். அப்போது ஏரியில் மீன் குஞ்சுகளை விட்டு இருந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் இந்த ஏரியில் மீன் பிடிப்பதற்கு ஏலம் விடப்பட்டது. இதில் திருவண்ணாமலையில் உள்ள உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில் ஏலம் எடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் சார்பிலும் அந்த ஏரியில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
கடந்த 11-ந் தேதி ‘உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கம்’ சார்பில் அந்த ஏரியில் மீன் பிடிக்க சென்றனர். தகவலறிந்து அங்கு வந்த ஜெயலட்சுமி மற்றும் அவரது தரப்பினர் நாங்களும் ஏரியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன் குஞ்சுகளை விட்டுள்ளோம். ஆனால் இதுவரை மீன் பிடிக்கவில்லை என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆத்திரம் அடைந்த கூட்டுறவு சங்கத்தினர் தாங்கள் பிடித்த 50 கிலோ மீன்களை இறந்த நிலையில் மீண்டும் தண்ணீரிலேயே கொட்டி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வெங்கடேசனின் மனைவி ஜெயலட்சுமி அவரது ஆதரவாளர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில், ‘‘சமுத்திரம் ஏரியில் மீன் பிடிக்கும் உரிமையை சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை பின்பற்றாமல் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு தந்துள்ளனர். மீன் பிடிக்க கால அவகாசம் கேட்டு கலெக்டருக்கும், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் உதவி செயற்பொறியாளருக்கும் அறிவிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே நாங்கள் ஏரியில் விட்டுள்ள மீன்களை பிடிக்க கால அவகாசத்தின் மூலம் அனுமதி அளிக்க வேண்டும். அல்லது சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பின் வழிகாட்டுதலின் படி ஏலத்தை திறந்த வெளியில் விட வேண்டும்’’ என்று கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story