பேரூராட்சிகளின் இணை இயக்குனர் வீடு, வீடாக சென்று ஆய்வு
வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று பேரூராட்சிகளின் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சிப்பணிகளை பேரூராட்சிகளின் இணை இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு செயல் அலுவலர் அசோகனிடம் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேரூராட்சி பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளுக்கும் நேரில் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து வழங்குகிறீர்களா? என விவரங்களை கேட்டறிந்தார். இதேபோல் துப்புரவு பணியாளர்களிடமும் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிப்பது குறித்த விவரங்களையும், இதில் இருந்து எவ்வாறு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது என்ற விவரங்களையும் கேட்டறிந்தார்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டுகோள்
பின்னர் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் உள்ள சமுதாய கூடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்களிடம், பிளாஸ்டிக், பாலித்தீன் உள்ளிட்ட பொருட்களை தவிர்ப்பது நல்லது. இவைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை எடுத்துச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த ஆய்வின்போது தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ், உதவி செயற்பொறியாளர் வரதராஜன், செயல் அலுவலர் அசோகன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story