கல்லூரி ஊழியருக்கு அரிவாள் வெட்டு


கல்லூரி ஊழியருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 13 May 2022 11:54 PM IST (Updated: 13 May 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரி ஊழியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது

மணல்மேடு
மணல்மேட்டை அடுத்த நத்தம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் வைத்தியநாதன்(வயது 36). தனியார் கல்லூரி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர், தனது திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ள உறவினரை அழைக்க பக்கத்து  ஊருக்கு சென்றார். அப்போது உறவினர் வீட்டிற்கு எதிர் வீட்டில் உள்ளவர்கள் முன் விரோதம் காரணமாக வைத்தியநாதனை தாக்கி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த வைத்தியநாதன் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், அதே ஊரை சேர்ந்த வைத்திலிங்கம் மகன் பிரவீன்குமார், ரெங்கையன் மகன் ஆனந்தன், வைத்திலிங்கம் மனைவி செல்வி ஆகிய 3 பேர் மீது மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை(வயது 48) கைது செய்தனர். மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story