கரிசல்பட்டியில் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்


கரிசல்பட்டியில் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 14 May 2022 12:08 AM IST (Updated: 14 May 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

கரிசல்பட்டியில் கைலாசநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

எஸ்.புதூர், 
கரிசல்பட்டியில் கைலாசநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கைலாசநாதர் கோவில்
எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில், 1,200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றதை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 11-ந்தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து யாக சாலை அமைத்து நான்கு கால பூஜைகளை சிவாச்சாரியார்கள் செல்லமணி, நடராஜன், விஸ்வநாதன் ஆகிேயார் நடத்தினர். 
அதனை தொடர்ந்து நேற்று காலை யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த குடங்களை கோவிலை வலம் வந்தனர். கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
மேலும் பரிவார தெய்வங்களான விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், ஆஞ்சநேயர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர் ஆகிய தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, சிங்கம்புணரி சரக தேவஸ்தானம் கண்காணிப்பாளர் தன்னாயிரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் திருப்பணிக்கான உபயங்களை கரிசல்பட்டியைச் சேர்ந்த விஸ்வநாதன், ராமச்சந்திரன், மோகன், சீனிவாசன், வெங்கட்ராமய்யர் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் விஸ்வ இந்து பரிஷத் மாநில பொறுப்பாளர் பாண்டியன், கரிசல்பட்டி ஆர்.எஸ்.எஸ். செயலாளர் சந்திரசேகரன், கரிசல்பட்டி ராமன், காரைக்கால் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் ஓமலிங்கம், சிங்கம்புணரி ஆர்.எஸ்.எஸ். தலைவர் குகன், பழனி பாதயாத்திரை குழு குருசாமி கனகசபாபதி, பா.ஜனதா மாநில செயலாளர் அஷ்வத்தாமன், ஆர்.எஸ்.எஸ். கோட்ட பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், தர்மபட்டி தண்டபாணி, ஒன்றிய சேர்மன் விஜயா குமரன், பா.ஜனதா ஒன்றிய தலைவர் தேவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் மேற்பார்வையில் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

Next Story