சிவன் கோவில்களில் பிரதோஷ விழா


சிவன் கோவில்களில் பிரதோஷ விழா
x
தினத்தந்தி 14 May 2022 12:18 AM IST (Updated: 14 May 2022 2:24 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி பகுதி சிவன் கோவில்களில் நடந்த பிரதோஷ விழாக்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆரணி

ஆரணி பகுதி சிவன் கோவில்களில் நடந்த பிரதோஷ விழாக்களில் திரளான பாக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

ஆரணி நகரில் புதுகாமூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியநாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் பிரதோஷ விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன, தொடர்ந்து நந்தியம் பெருமானுக்கும் உற்சவர் சாமிக்கும் 27 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. 

பின்னர் உற்சவர் சாமியை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ரிஷப வாகனத்தில் கோவில் உள் வளாகத்தில் சிவபுராணம் பாடியபடி வலம் வந்தனர். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல ஆரணி நகரில் கோட்டை கைலாயநாதர், பூமிநாதர், அம்மையப்பர், சேவூர் விருபாட்சீஸ்வரர், எஸ்.வி.நகரம் திரைகேபேஸ்வரர், பழங்காமூர் காசி விஸ்வநாதர், பையூர் விருபாட்சீஸ்வரர், அடையபலம்  நீலகண்டேஸ்வரர் கோவில்களிலும், காமக்கூரில் சந்திரசேகர சாமி கோவிலிலும் பிரதோஷ பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story