குடிசை வீட்டுக்கு தீ வைப்பு


குடிசை வீட்டுக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 14 May 2022 12:31 AM IST (Updated: 14 May 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

குடிசை வீட்டுக்கு தீ வைத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

 சிக்கல்
நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே உள்ள திருக்கண்ணங்குடி பெரிய முக்கால் வட்டத்தை சேர்ந்தவர் திலகர்(வயது 45). இவரது மகள் குணவதி. குணவதியும், திருக்கண்ணங்குடி முதலியார் தெருவை சேர்ந்த முத்தையன் மகன் உதயராஜும் காதலித்து கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இடையே திடீரென பிரச்சினை ஏற்படவே, குணவதி தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மாமனார் வீட்டுக்கு சென்ற உதயராஜ், மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் வர மறுக்கவே, உன் அப்பா வீட்டை கொளுத்தி விடுவேன் என்று மனைவியை மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து திலகரின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ, அருகே இருந்த தியாகராஜன் என்பவரின் வீட்டிற்கும் பரவியது. உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் திலகர் வீட்டில் இருந்த ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து திலகர் கொடுத்த புகாரின்பேரில், கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிசை வீட்டுக்கு தீ வைத்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story