அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6 லட்சம் மோசடி

அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.6 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 14 May 2022 12:34 AM IST (Updated: 14 May 2022 12:34 AM IST)
t-max-icont-min-icon

அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.5 லட்சத்து 96 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி:
அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.5 லட்சத்து 96 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் லாரன்ஸ் (வயது 37). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கூடுதல் சம்பளத்தில் வேலை தேடி இணையதளத்தை பார்த்தார். அப்போது இணையதளம் வாயிலாக இவரை தொடர்பு கொண்ட ஆதித்யா சர்மா, மணிஷ் நாயர் ஆகியோர் தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் தாங்கள் வேலை வாங்கி தருகிறோம். 
ஜெர்மனி நாட்டில் வேலை உள்ளது. மாதம் ரூ.85 ஆயிரம் சம்பளம் என தெரிவித்தனர். இதை நம்பிய ராபர்ட் லாரன்சிடம் அந்த நபர்கள் பதிவு கட்டணம், ஐ.டி. உருவாக்குதல் கட்டணம், பயிற்சி கட்டணங்கள், முன்பணம் என மொத்தம் ரூ.5 லட்சத்து 96 ஆயிரம் கட்ட வேண்டும் என கூறினார்கள். 
மோசடி
இதை நம்பி ராபர்ட் லாரன்ஸ் அந்த தொகையை அவர்கள் கூறிய குறிப்பிட்ட 2 வங்கி கணக்குகளுக்கு ரூ.5 லட்சத்து 96 ஆயிரத்தை அனுப்பி வைத்தார். இதையடுத்து ஆதித்யா சர்மா, மணிஷ் நாயர் ஆகிய 2 பேரும் ராபர்ட் லாரன்சிடம் பேசுவதை தவிர்த்தனர். இதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராபர்ட் லாரன்ஸ் இந்த மோசடி குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். 
இந்த மோசடி குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story