அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. நிலைய அலுவலர் செல்வம் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் பொதுமக்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுப்பது மற்றும் தீ விபத்தில் காயம் ஏற்பட்டால் பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். மேலும் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தும் முறை குறித்து பயிற்சி அளித்தனர்.
Related Tags :
Next Story