கோட்டப்பட்டி அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை


கோட்டப்பட்டி அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 14 May 2022 12:35 AM IST (Updated: 14 May 2022 12:35 AM IST)
t-max-icont-min-icon

கோட்டப்பட்டி அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

அரூர்:
தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே உள்ள பெரியபட்டி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 29). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கிருஷ்ணவேணி கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணவேணி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story