அபூர்வ அந்துப்பூச்சி
அபூர்வ அந்துப்பூச்சி சுற்றித்திரிகிறது.
திருச்சி:
அந்துப்பூச்சிகளில் பல வகைகள் உள்ளன. நமக்கு தெரிந்ததெல்லாம் நெல் மூட்டைகள், அரிசி மூட்டைகளில் திரியும் சாம்பல் நிற அந்துப்பூச்சிகள்தான். இந்த நிலையில் இந்தியாவில் பரவலாக உள்ள அபூர்வ அந்துப்பூச்சி திருச்சி ஜங்ஷன் பகுதியில் சாலையோரம் பறக்க முடியாமல் ரீங்காரமிட்டபடி கிடந்தது. இது தொடர்பாக மண்டல வன பாதுகாவலர் சதீஷிடம் கேட்டபோது, அந்த பூச்சி காபி தேனீ பருந்து (coffe been hawkmoth) என்று அழைக்கக்கூடிய அந்துப்பூச்சி, என்றார்.
மேலும் இந்த பூச்சி பட்டாம்பூச்சி வகையை சேர்ந்தது. காபி கிளியர்விங் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூச்சி இந்தியா மட்டுமின்றி இலங்கை, ஜப்பான், ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படும் அபூர்வ தேனீ வகையை சேர்ந்ததாகும். முட்டையிட்டு, புழுக்களாக உருவாகி, பின்னர் இறக்கை முளைத்து தேனீக்களைபோல் காட்சி அளிக்கக்கூடியது. பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு என பல்வேறு நிறங்களில் திரிகின்றன. இவை மலர்களில் உள்ள தேனை உறிஞ்சி உயிர்வாழ்பவை என்றும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story