ஆனைமலை பேரூராட்சியில் 98 சதவீதம் வரி வசூல்
ஆனைமலை பேரூராட்சியில் 98 சதவீதம் வரி வசூல்
ஆனைமலை
ஆனைமலை பேரூராட்சியில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வரிவசூல் செய்வதில் மந்தமாக இருந்தது. இந்நிலையில், பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள கலைச்செல்வி மற்றும் செயல் அலுவலர் உமாராணி ஆகியோர் முயற்சியால் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் வரிவசூல் செய்ய பொதுமக்கள், வணிகா்கள், கடை வாடகைதாரா்களை நேரடியாக சந்தித்து வரி செலுத்த வேண்டியதின் அவசியம் குறித்து எடுத்துக்கூறினர். இதையடுத்து அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் 98 சதவீதம் வரிவசூல் நடைபெற்றுள்ளது. இதில் பேரூராட்சிக்கு உட்பட்ட 6 ஆயிரத்து 600 பேரிடம் வரி வசூலிக்க வேண்டியதில், சொத்துவரி 96 சதவீதம், குடிநீர் வரி 98 சதவீதம் மற்றும் தொழில் வரி 100 சதவீதம் வசூலாகியுள்ளது. இந்த தகவலை செயல் அலுவலர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story