குளச்சலில் 900 லிட்டர் மண்எண்ணெய், 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் போலீசார் விசாரணை


குளச்சலில் 900 லிட்டர் மண்எண்ணெய், 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 May 2022 12:38 AM IST (Updated: 14 May 2022 12:38 AM IST)
t-max-icont-min-icon

குளச்சலில் 2 இடங்களில் பதுக்கி வைத்திருந்த 900 லிட்டர் மண்எண்ணெய், 1½ டன் ரேஷன் அரிசியை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.

குளச்சல், 
குளச்சலில் 2 இடங்களில் பதுக்கி வைத்திருந்த 900 லிட்டர் மண்எண்ணெய், 1½ டன் ரேஷன் அரிசியை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.
900 லிட்டர் மண்எண்ணெய்
குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது, அவர்கள் சைமன்காலனி பாலம் பகுதியில் சென்றபோது, ஒரு தென்னந்தோப்பில் சந்தேகப்படும் வகையில் இருந்த பிளாஸ்டிக் கேன்களை சோதனை செய்தனர். அப்போது, அதில் மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 45 கேன்களில் 900 லிட்டர் மண்எண்ணெய் இருந்து தெரியவந்தது. உடனே, போலீசார் அவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். 
ரேஷன் அரிசி பறிமுதல்
இதேபோல், இனயம் சின்னத்துறை பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு பிளாஸ்டிக் மூடைகளில் பதுக்கி வைத்திருந்த 1½ டன் ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 
போலீசாரின் விசாரணையில், அரிசியை கேரளாவுக்கு கடத்தி செய்வதற்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணெய் மற்றும் அரிசியை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story