ரெயில்வே மேம்பாலத்தில் சேதமடைந்த சாலை சீரமைப்பு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வையகளத்தூர் ரெயில்வே மேம்பாலத்தில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டது.
நீடாமங்கலம்:
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வையகளத்தூர் ரெயில்வே மேம்பாலத்தில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டது.
சேதமடைந்த சாலை
நீடாமங்கலம்-திருவாரூர் சாலையில் அமைந்துள்ளது வையகளத்தூர் ெரயில்வே மேம்பாலம். இந்த பாலத்தின் வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் மேம்பாலத்தில் உள்ள சாலை சேதமடைந்தது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல் தடுமாறி கீழே விழும் அபாயம் இருந்து வந்தது. சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் வெளிவந்தது.
சீரமைக்கப்பட்டது
இதன் எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தில் சேதமடைந்த சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்து பணியாளர்கள் மூலம் சீரமைத்தனர்.
இதை தொடர்ந்து மேம்பாலத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு தினத்தந்தி நாளிதழுக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story