2 மொபட்டுகள் எரிந்து சேதம்


2 மொபட்டுகள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 14 May 2022 1:22 AM IST (Updated: 14 May 2022 1:22 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலத்தில் கூரை வீட்டில் தீவிபத்தில் 2 மொபட்டுகள் எரிந்து சேதம் அடைந்தது.

நீடாமங்கலம்:
நீடாமங்கலம் காமராஜர் காலனி 5-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் ஜெகபரலி (வயது40). இவரது கூரை வீடு நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த நீடாமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன், சிறப்பு நிலைய அலுவலர் பார்த்தீபன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீ  மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இந்த தீவிபத்தில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த  2 மொபட்டுகள், வீட்டில் இருந்த ஷோபா உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்தன. இதன்சேத மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. தீவிபத்து ஏற்பட்டது போது ஜெகபரலி அருகில் உள்ள தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் இருந்ததால் உயிர் தப்பினார். தீவிபத்துக்கான காரணம் குறித்து நீடாமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story