4 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்


4 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்
x
தினத்தந்தி 14 May 2022 1:26 AM IST (Updated: 14 May 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

4 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்

வேதாரண்யம்
`அசானி' புயல் காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த 4 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால்,  ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருந்தன. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இந்தநிலையில் கடலின் சீற்றம் வெகுவாக குறைந்ததால் பைபர் படகு மீனவர்கள் 4 நாட்களுக்கு பிறகு நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 


Next Story