தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சாலை, குடிநீர் வசதி வேண்டும்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் நல்லவன்னியன்குடிக்காடு கிராமத்தில் உள்ள கே.எஸ்.ஏ.நகரில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.மேலும், முறையான குடிநீர் கிடைக்காததால் மாணவ-மாணவிகள், முதியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி சாலை மற்றும் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், பாபநாசம்.
Related Tags :
Next Story