கோவில்களில் பிரதோஷ வழிபாடு
கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது
வேதாரண்யம்
பிரதோஷத்தையொட்டி வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதோஷ நாயனார் புறப்பாடு நடைபெற்றது. இதேபோல, தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடார் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன. மேலும், ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், நாகையில் உள்ள காயாரோகணசாமி மற்றும் நந்திகேஸ்வரர், அமரநந்தீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், கட்டியப்பர் கோவில், நடுவதீஸ்வரர் கோவில், அழகிய நாதர் கோவில், வீரபத்திர சுவாமி கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நாகநாதர் கோவில், சட்டையப்பர்கோவில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில், வடக்கு பொய்கைநல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், நாகூர் நாகநாதர் கோவில், அந்தன பேட்டை அண்ணாமலையார் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
Related Tags :
Next Story