தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்கைள் கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சிற்றம்பலம்:
திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்கைள் கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புராதனவனேஸ்வரர் கோவில்
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் பழமை வாய்ந்த புராதனவனேஸ்வரர் கோவில் உள்ளது. தற்போது இக்கோவிலில் திருப்பணி வேலைகளை செய்து முடிப்பதற்கு வசதியாக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தநிலையில் கோவிலின் அருகிலேயே பொது சுகாதார வளாகம் செயல்பட்டு வருகிறது. கோவிலின் எதிர்புறம் அமைந்துள்ள சன்னதி குளக்கரையின் ஒரு பக்கத்தில் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.
சுகாதார சீர்கேடு
கோவில் வளாகத்தின் ஒரு பகுதியில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே கோவில் வளாகத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றவும், குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ேமலும் கோவில் வளாக பகுதி முழுவதையும் சுகாதாரமான முறையில் பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story