பூக்குழி திருவிழாவில் 2 பேர் காயம்
நெல்லை டவுனில் நடந்த பூக்குழி திருவிழாவில் 2 பேர் காயம் அடைந்தனர்.
நெல்லை:
நெல்லை டவுன் சாலியர் தெருவில் தர்மராஜா- திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து பூக்குழி இறங்கினர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 பக்தர்கள் அக்னி குண்டத்தில் விழுந்து காயமடைந்தனர். அங்கு தயார் நிலையில் இருந்த பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனே அந்த பக்தர்களை வெளியே தூக்கி காப்பாற்றினார்கள். அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story