கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம்


கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம்
x
தினத்தந்தி 14 May 2022 2:45 AM IST (Updated: 14 May 2022 2:45 AM IST)
t-max-icont-min-icon

கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது.

கொடுமுடி
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. 
மகுடேஸ்வரர் கோவில்
கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை தேர் திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் பூஜை நடைபெற்று வந்தது. மேலும் சாமி வாகன வீதி உலாவும் நடந்தது. 11-ந் தேதி வடிவுடை நாயகி உடனமர் மகுடேஸ்வரருக்கும், பூதேவி, ஸ்ரீதேவி சமேத வீரநாராயண பெருமாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். 
தேரோட்டம்
முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து சென்று கோவில் முன்பு       கொண்டு நிறுத்தினர். முன்னதாக கொடுமுடி தேர் வீதிகளில் உள்ள மின் இணைப்புகளை கொடுமுடி மின்வாரிய ஊழியர்கள் துண்டித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். 
விழாவையொட்டி பேரூராட்சி மூலமாக பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் கொடுமுடி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ் செய்திருந்தார்.

Next Story