புதிய கண்காணிப்பு கேமரா வசதி; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
மூலைக்கரைப்பட்டி அருகே புதிய கண்காணிப்பு கேமரா வசதியை, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இட்டமொழி:
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன், மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நாகல்குளம் 2-வது வார்டு பகுதியில் உள்ள தெருவில் புதிய கண்காணிப்பு கேமரா வசதியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற காமாட்சி அம்மன் மற்றும் சுடலை மாடசாமி கோவில் கொடை விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
மூலைக்கரைப்பட்டி நகர பஞ்சாயத்து தலைவர் பார்வதிமோகன், நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, நாகல்குளம் காங்கிரஸ் தலைவர் சுப்புராமன் பண்ணையார், நாங்குநேரி கிழக்கு மற்றும் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ரவீந்திரன், அம்புரோஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story