தொழிலாளியிடம் பணம்- செல்போன் பறிப்பு; 3 பேருக்கு வலைவீச்சு


தொழிலாளியிடம் பணம்- செல்போன் பறிப்பு; 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 May 2022 2:54 AM IST (Updated: 14 May 2022 2:54 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அருகே தொழிலாளியிடம் பணம்- செல்போன் பறித்துவிட்டு தப்பித்து சென்ற 3 பேரை போலீசாா் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெருந்துறை
பெருந்துறை துடுப்பதி அருகே உள்ள அன்பு நகரை சேர்ந்தவர் மணிஸ் (வயது 33). இவர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்றபோது, அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் திடீரென மணிசை வழிமறித்து கீழே தள்ளினர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.700, செல்போன், 2 ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பினர். செல்லும்போது மணிஸ் மோட்டார்சைக்கிளின் முகப்பு விளக்கை கற்களை கொண்டு உடைத்து விட்டு சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story