எச்.ஐ.வி.யால் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி


எச்.ஐ.வி.யால் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
x
தினத்தந்தி 14 May 2022 2:54 AM IST (Updated: 14 May 2022 2:54 AM IST)
t-max-icont-min-icon

எச்.ஐ.வி.யால் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பெரம்பலூர்:
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு இணைந்து பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், எச்.ஐ.வி. நோய் தொற்றினால் இறந்தவர்களுக்காக சர்வதேச மெழுகுவர்த்தி தினத்தை நேற்று அனுசரித்தது. மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் செந்தில்குமார் வழிகாட்டுதலின்படி, மாவட்ட திட்ட மேலாளர் சுமதி தலைமையில் எச்.ஐ.வி. நோய் தொற்றால் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் எச்.ஐ.வி. உள்ளோர் கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீநாதன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் பணியாளர்கள், இளைப்பாறுதல் மையம், ஆதரவு மற்றும் பராமரிப்பு மையம், நம்பிக்கை மையம், ஏ.ஆர்.டி.மையம், எச்.ஐ.வி. கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Next Story