அரியலூரில் சாரல் மழை


அரியலூரில் சாரல் மழை
x
தினத்தந்தி 14 May 2022 2:56 AM IST (Updated: 14 May 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் சாரல் மழை பெய்தது.

அரியலூர்:
அரியலூரில் கடந்த 3 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. காலை 9 மணி வரை சாரலாக மழை பெய்தது. இதனால் வெளியூரில் இருந்து பஸ்கள் உள்ளிட்டவற்றில் வந்த பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். சில மாணவிகள் மழையில் நனையாமல் இருக்க துப்பட்டாவால் தலையை மூடியபடி சென்றனர். மழையின் அளவு குறைந்து மதியம் 2 மணிக்கு மேல் வழக்கம்போல் வெயில் அடிக்க தொடங்கியது. இருந்தபோதும் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Tags :
Next Story