பெண்ணை கற்பழிக்க முயன்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது
அரகா கிராமத்தில் பெண்ணை கற்பழிக்க முயன்ற வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்
சிவமொக்கா: அரகா கிராமத்தில் பெண்ணை கற்பழிக்க முயன்ற வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணை கற்பழிக்க முயற்சி
சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா அரகா கிராமத்தில் கடந்த 9-ந் தேதி ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த ஒரு பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கற்பழிக்க முயன்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை உத்தர கன்னடா மாவட்டம் சிர்சியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட சம்பத், ஆதர்ஸ் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.
இதில் ஆதர்ஸ், சம்பத் ஆகியோர் தங்களது உறவினர்களின் வீடுகளில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் கூறப்படுகின்றன. இந்த கிராமம் உள்துறை மந்திரி அரக ஞானேந்திராவின் சொந்த ஊராகும். இதனால் அவர் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்.
இதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், ‘உள்துறை மந்திரி அரக ஞானேந்திராவின் சொந்த ஊரிலேயே இதுபோன்ற கொடுமை நடந்துள்ளது. இது பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மையான குற்றவாளிகளை போலீசார் பிடித்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்’ என்று கூறினர்.
Related Tags :
Next Story